Ad Code

Responsive Advertisement

இடவசதி இல்லாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க முடியாமல் தவிப்பு.

தர்மபுரி மாவட்ட தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது. 
கூட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு மாநில செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது: பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒருபள்ளியில் நான்கு பிரிவுக்கு (செக்ஸன்) மேல் கூடுதலாக வகுப்பு துவக்கினால் கல்வித்துறையில்முன் அனுமதி பெற வேண்டும். 


ஆண்டுக்கு ஒருமுறை வாகனங்கள் எப்சி செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டாயமாக அனுமதிபெற வேண்டும். 10 ஆண்டு அனுபவம் பெற்ற டிரைவர்களை நியமித்து பள்ளி வாகனங்கள் ஓட்டவேண்டும். பள்ளிகளுக்கு பரவலான இடங்கள் வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நகரம் மற்றும் மாவட்ட தலைநகரத்தில் 8 கிரவுண்ட் நிலமும், மாநகரப் பகுதியில் 6 கிரவுண்ட் நிலவும், கிராமத்தில் 3 ஏக்கர் நிலமும் பள்ளி துவங்க தேவை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு தேவையான இட வசதி இல்லாமல், தமிழகத்தில் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றன. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 400 பள்ளிகள் அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கின்றன. 

20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு விதிமுறைகள் திருத்தம் செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement