Ad Code

Responsive Advertisement

தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்கள் இருந்தால் போதும் ஆங்கில வழி கல்வி; அரசு உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருந்தாலே போதும், ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல் படும் அனைத்து தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி பிரிவுகள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கை 30க்கும் மேல் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 3 ஆசிரியர்கள் பணியாற்றினால் அந்த பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதேநேரத்தில் 30 மாணவர்களுக்கு கீழ் உள்ள இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பிரிவுகள் தேவை இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை தொடங்க வேண்டும் என்று அரசு கண்டிப்பாக தெரிவித்துவிட்டது. இதனால் இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவு வருவதில் தடையேதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


30 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிகளில் 30 மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் சேர்த்து ஆங்கில வழிக் கல்வியை தொடங்க வேண்டும் என்றும் இணை இயக்குநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement