Ad Code

Responsive Advertisement

மருத்துவப் படிப்பு: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 2 கடைசி

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 30,380 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.


எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் பெற வெள்ளிக்கிழமை கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 447 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றனர். இதுவரை மொத்தம் 30,380 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் (31,912 மாணவர்கள்) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 1,532 பேர் குறைவாக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்க (ஜூன் 2) கடைசி நாளாகும். இதுவரை மொத்தம் 20,662 மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி வெளியிடவும், முதல் கட்ட கலந்தாய்வை ஜூன் 18-ஆம் தேதி தொடங்கவும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement