Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளி மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

உடுமலை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி மாணவியருக்கு, 2013 கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார சூழ்நிலையால், பெண்களின் கல்வி தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில், மாநில அரசு, பள்ளி கல்வித்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மூன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பெண் குழந்தைக்கு, 500 ரூபாயும், ஆறாம் வகுப்பு குழந்தைகளுக்கு 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 1,850 ரூபாயும் வழங்கப்படுகிறது.
உடுமலை ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பெண் குழந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், 2013-14 கல்வியாண்டிற்கான 7 லட்சத்து 91 ஆயிரத்து 650 ரூபாயை உடுமலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement