Ad Code

Responsive Advertisement

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற
 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 
திருச்சியில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.
5 சதவீத மதிப்பெண் சலுகை


ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற 
வேண்டும் என்பதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு  5 சதவீதம் 
மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்தசலுகை 
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு 
எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்–அமைச்சர்
 ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில்அறிவித்தார். 
இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 150–க்கு 82 மதிப்பெண்கள் 
எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.
ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி 
பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் 
சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த 
நிலையில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 
89 மதிப்பெண்கள் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான 
சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மையங்களில் 
கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே 
வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

பட்டதாரி ஆசிரியர்கள்

இந்த நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை பெற்ற 
பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வருகிற 
6–ந் தேதி தொடங்குகிறது.


இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி 
செல்வக்குமார் கூறுகையில், ‘‘5 சதவீத மதிப்பெண் சலுகை 
பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 
பணி மே மாதம் 6–ந் தேதி தொடங்குகிறது. திருச்சியில் 
வாசவி வித்யாலாய பள்ளியில் இந்த பணி நடைபெற 
உள்ளது.இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 1,086 பட்டதாரி 
ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது. 
மே 12–ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடையும்’’ என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement