Ad Code

Responsive Advertisement

பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடையுடன் இலவச பஸ் பயண அட்டை ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கும் அன்று அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும்

எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கும் அன்று அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு அரசு சார்பில்
வழங்க கூடிய பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடையுடன் இலவச பஸ் பயண அட்டையும் வழங்கப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப் படுகிறது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. வழக்கமாக இலவச பாஸ் பள்ளிக்கூடம் திறந்து ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில்தான் வழங்கப்படும். போக்குவரத்து கழகம் தரும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிகள் ஒப்படைப்பதில் ஏற்படும் தாமதத்தால் இலவச பாஸ் பள்ளி திறந்தவுடன் வழங்க முடியவில்லை.

சில நேரம் போக்குவரத்து கழக மூலமும் இந்த கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இலவச பஸ் பாசை மாணவர்கள் கையில் கிடைப்பதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விடுகிறது. ஆனால் இந்த ஆண்டு இலவச பஸ் பாஸ் பள்ளிக்கூடம் திறக்கும் முதல் நாள் அன்றே வழங்க பள்ளிக் கல்வித்துறை முழுமையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 
இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் பள்ளி தொடங்கும் அன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல பள்ளி தொடங்கும் அன்று பாசையும் வழங்க திட்டமிட்டுள்ளது. பஸ் பாஸ் வழங்க வேண்டிய மாணவ–மாணவிகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக தொகுத்து என்.எஸ்.எஸ். இயக்குனருக்கு வருகிற 30–ந் தேதிக்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். போக்குவரத்து கழக அலுவலகங்களில் இலவச பஸ் விண்ணப்ப படிவங்களை முன்கூட்டியே பெற்று பூர்த்தி செய்து அனுப்ப அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கும் அன்று அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்க கூடிய பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடையுடன் இலவச பஸ் பயண அட்டையும் வழங்கப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement